India
நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் தெரியுமா ? - வெங்காய விலை அதிகரிப்பு சு.சாமி கருத்து !
கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டதன் விளைவாக நாடு முழுவதும் வெங்காயத்தில் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
தங்கம், வெள்ளி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை பட்டியலுடன் வெங்காயத்தின் விலை பட்டியலையும் நாளுக்கு நாள் ஒப்பிடும் வகையில் அதன் விலையும் நூற்றுக்கணக்கில் அதிகரித்து காணப்படுகிறது.
ஆனால், இந்த விலைவாசி உயர்வு குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் மத்திய நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமனோ, ”தான் வெங்காயம் அதிகம் சாப்பிடுவதில்லை என்பதால் அதன் விலை பற்றி கவலையில்லை” என்று மக்களவையில் பேசியது நாடுமுழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் அவருக்கு பலத்த கண்டனங்களும் எழுந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி. அப்போது பேசிய அவர், “வெங்காய விலை உயர்வு நம்முடைய தோல்விதான் காரணம். சரியான பொருளாதார கொள்கையை பின்பற்றவில்லை.
ஏற்கனவே நம் நாட்டு மக்களிடம் கையில் பணம் இல்லை. வருமான வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் அப்போது தான் பொருளாதர பிரச்னைகள் சீராகும்” எனக் கூறினார்.
மேலும், வெங்காய விலையை கட்டுப்படுத்துவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகு, நிர்மலா சீதாராமனிடம் தான் கேட்க வேண்டும். நான் நிறைய புத்தகங்களை எழுதி இருக்கிறேன். அதில் லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகியுள்ளது. ஆனால், நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் தெரியணுமே?” என சுப்பிரமணிய சுவாமி நக்கலாக பதிலளித்துள்ளார்.
Also Read
-
“தமிழ் மீனவர்களை கைவிடும் ஒன்றிய அரசு!” : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கண்டனம்!
-
திருவண்ணாமலையில் 33 ஏக்கர் பரப்பளவில் ‘மு.க.ஸ்டாலின் பூங்கா’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
”திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்ற பார்க்கிறது பா.ஜ.க” : கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!
-
“தமிழ்நாடுதான் Electronics துறையின் Capital” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மதுரை மீது பா.ஜ.க.வுக்கு ஏன் இத்தனை வன்மம்? : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சரமாரி கேள்வி!