India
“ரியல் எஸ்டேட் - கட்டுமான துறைகள் ஆழ்ந்த சிக்கலில் தவிக்கிறது” : மோடி அரசை எச்சரிக்கும் ரகுராம் ராஜன்!
இந்தியாவின் ரியல் எஸ்டேட், கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு தொழில்கள் ‘ஆழ்ந்த சிக்கலில்’ உள்ளது. மேலும் இந்த துறைகளுக்கு கடன் வழங்கும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் அவற்றின் சொத்து தரத்தை மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஆங்கில நாளிழதலுக்கு பேட்டிய அளித்துள்ள ரகுராம் ராஜன், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையில் உள்ளது. இதனால் இந்தியாவில் வேலையின்மை அதிகரித்து வருவதாக கூறினார்.
மேலும் பேசிய அவர், செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 4.5% ஆக குறைந்துள்ளது. இது கடந்த 6 அண்டுகளில் மிகவும் குறைவானதாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்தியாவின் ரியல் எஸ்டேட், கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகள் ஆழ்ந்த சிக்கலில் உள்ளது. அதனால் இந்த துறைகளில் கடன் கொடுத்து இருக்கும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தங்கள் சொத்துக்களை மறு பரிசீலனை செய்து கொள்ள வேண்டும்.
மேலும் அந்த நிறுவனங்களின் சொத்து தர மதிப்பாய்வை ரிசர்வ் வங்கி மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த பொருளாதார மந்தநிலைக்கு மத்திய அரசின் தவறான கொள்கையே காரணம் என்றும், அவற்றால் இந்தியாவின் கிராமப்புறங்கள் மிகக் கடுமையான பாதிப்பை எதிர் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Also Read
-
ஜனநாயகத்தின் குரல்வளையை தன் பூட்ஸ் காலால் நெறிக்கும் த.வெ.க அரசு : தி.மு.க ஆவேசம்!
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!