India
"மோடி அரசுக்கு பொருளாதாரம் பற்றிய புரிதலே இல்லை" - அடுக்கடுக்காக குற்றம்சாட்டிய ப.சிதம்பரம்!
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் பாஜக அரசின் சூழ்ச்சியால் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் 106 நாட்களுக்குப் பிறகு நேற்று ஜாமினில் வெளியே வந்தார்.
ஜாமினில் வெளியே வந்ததும், இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய நிலை குறித்து அதிரடியாக பேட்டி அளித்துள்ளார் ப.சிதம்பரம்.
அதில், “நீதிமன்றத்தின் மீதும், மக்கள் மீதும் அதீத நம்பிக்கை இருந்தது. 106 நாட்களுக்கு பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், பொருளாதார நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைகிறேன்.
நேற்று இரவு 8 மணிமுதல் சுதந்திர காற்றை சுவாசித்து வருகிறேன். ஆனால் ஜம்மு காஷ்மீரில் உள்ள 75 லட்சம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டும், தடுக்கப்பட்டும் உள்ளது. காஷ்மீர் அரசியல் தலைவர்கள் இன்றளவும் வீட்டுச் சிறையில் இருப்பது வேதனை அளிக்கிறது.
இந்திய பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஆனால், மோடியின் பா.ஜ.க அரசுக்கு பொருளாதார சரிவின் வீரியமே தெரியவில்லை. ஆகையாலேயே அவர்களால் இந்த மந்தநிலைக்குத் தீர்வு காண முடியவில்லை. மேலும், அவர்களுக்கு பொருளாதாரத்தைப் பற்றிய புரிதல் என்பதே இல்லை.
பணமதிப்பு, ஜி.எஸ்.டியால் மோசமான நிதி நெருக்கடிக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். நன்மையே நடக்கும் என கூறி பா.ஜ.க அரசு மக்களை வழக்கம் போல் ஏமாற்றி வருகிறது. பொருளாதார சரிவால் நாட்டின் வளர்ச்சி 4.5 சதவிகிதமாக குறைந்துவிட்டது. இவற்றுக்கெல்லாம் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?” என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!