India
கலைஞரால் நவீனப்படுத்தப்பட்ட சேலம் உருக்காலையை தனியாருக்கு கொடுக்ககூடாது: டி.ஆர்.பாலு எம்.பி.வலியுறுத்தல்!
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று கூடிய கூட்டத்தில் சேலம் உருக்காலையை தொடர்பாக திமுக சார்பில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுக்கப்பட்டது.
அப்போது அந்த விவாவத்தில் பேசிய தி.மு.க மக்களவை குழுதலைவர் டி.ஆர்.பாலு, “சேலத்தில் உள்ள இருப்பு உருக்காலை தமிழகத்தின் முன்னாள் முதல்வர் தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.க ஆட்சியில் நவீனப்படுத்தப்பட்டது. அந்த ஆலையை உருவாக்கியதில் தலைவர் கலைஞர் பங்கு அளப்பரியது.
ஆனால், தற்போது ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க அரசு சிறந்த பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையை தனியாரிடம் ஒப்படைக்க துடிக்கிறது. இது சரியல்ல. சேலம் ஆலையில் ஏற்பட்டுள்ள நிதி பற்றக்குறையை எங்கள் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வரானதும் அடைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்வார்.
சேலம் உருக்காலை தமிழர்களின் பெருமைகளில் ஒன்றாகக் கருதப்படும். எனவே அதனை தனியாரிடம் கொடுக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும்” என்று மத்திய அரசை வலியுறுத்தி டி.ஆர்.பாலு பேசினார்.
அப்போது குறிக்கிட்ட மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தி.மு.க ஆட்சியில் நவீனப்படுத்தப்பட்டதாக பெருமையாக சொல்கிறீர்கள். ஆனால், அப்போது ஆயிரக்கணக்கான கோடியில் ஆலை நவீனப்படுத்தப்பட்டபோது, அதை சரியாக நிர்வகிக்காமல் போனதாக தெரிவித்தார்.
அப்போது அதற்கு மறுப்பு தெரிவித்து டி.ஆர்.பாலு தொடர்ந்து பேசிய போது அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு தி.மு.க எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!