India

''இந்தியாவின் உண்மையான ஜி.டி.பி வளர்ச்சி 1.5 சதவீதம் தான்'' - பகீர் கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமி!

நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சி நடப்பு காலாண்டில் 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சி சரிவு குறித்து பொருளாதார வல்லுநர்கள், எதிர்க்கட்சியினர் என கருது தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியாது என பா.ஜ.க மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “செய்தியாளர்கள் கேட்கும் கேள்விக்கு நிதி அமைச்சர் பதில் சொல்லாமல், சிவில் அதிகாரிகளிடம் மைக்கை நீட்டுகிறார். நாட்டில் என்ன பிரச்சனை நிலவுகிறது.

ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல், கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அளித்து வருகிறார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியாது” எனக் கூறினார்.

மேலும், “பிரதமரைச் சுற்றி உள்ள ஆலோசகர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அவரிடம் பொருளாதாரத்தின் உண்மைத் தன்மையை கூறாமல் , இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளதாகப் பிரதமரிடம் பொய்யான தகவலைக் கூறி நம்பவைக்கிறார்கள்” எனச் சாடினார்.

மேலும் இன்றைய உண்மையான ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் என்ன தெரியுமா? 4.8% ஆக குறைந்து வருவதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், உண்மையான ஜி.டி.பி வளர்ச்சி 1.5 சதவீதம் தான் இருக்கும்” என அவர் தெரிவித்தார்.

முன்னதாகவே, மோடி அரசுக்கு பொருளாதாரத்தின் அடிப்படை கூட தெரியவில்லை என கார்ப்பரேட்களுக்கு அளித்த வரிச்சலுகை குறித்து சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “மோடி அரசுக்கு பொருளாதாரத்தின் அடிப்படை கூட தெரியவில்லை” : பாஜகவை வறுத்தெடுக்கும் சுப்பிரமணியன் சுவாமி!