India
மோடி ஆட்சியில் கவலைக்கிடமான இந்திய பொருளாதாரம் - ஜிடிபி குறைந்ததை ஏற்றுக்கொள்ளவே முடியாது: மன்மோகன் சிங்
இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு காரணமாக ஆட்டோமொபைல், உணவு உற்பத்தி உள்ளிட்ட நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஜி.எஸ்.டி வரி விதிப்பால் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளதால் அசோக் லைலேண்ட், மாருதி, மஹிந்திரா, போஷ் இந்தியா போன்ற பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி வருகின்றன.
மேலும் பங்குச்சந்தை தொடர்ந்து சரிவைச் சந்திக்கிறது. அதனால் அன்னிய முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளை திரும்பப் பெறுகின்றனர். ஆனால் இதனைப் பற்றிக்கவலைப் படமால் நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சியில் இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நாளுமன்றத்திலேயே தெரிவித்துவருகின்றார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்கிறது என பிரதமர் மோடியும் அவரது அமைச்சர்களும் கூறிவருவது முற்றிலும் பொய் என்பதனை நிருப்பிக்கும் வகையில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பு நிதியாண்டின் 2-ம் காலாண்டின் ஜி.டி.பி. வளர்ச்சி 4.5 ஆக குறைந்துள்ளது. கடந்த காலாண்டில் 5 ஆக ஜி.டி.பி வளர்ச்சி தற்போது 4.5 ஆக குறைந்துள்ளது.
இதுபொருளாதார வல்லுநர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கவலை அளிப்பதாக என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “ முதல் காலாண்டில் 5 சதவீதம் என்ற அளவில் இருந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2வது காலாண்டில் 4.5 சதவீதமாக கடும் வீழ்ச்சி அடைந்திருப்பது மிகவும் கவலை அளிக்கிறது.
பொருளாதாரத்தை விட நமது சமூகத்தின் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. 2வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.5%ஆக குறைந்ததை ஏற்றுக்கொள்ளவே முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்
Also Read
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!
-
“VBGRAMG சட்டம் - பாஜகவிற்கு தமிழ்நாடு பாடம் புகட்டும்” : தலைவர்கள் கண்டன உரை!
-
“சென்னை பெசன்ட் நகர் ‘உணவுத் திருவிழா’ டிசம்பர் 28 வரை நீட்டிப்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி தகவல்!
-
ஒன்றிய அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ்நாடு : வின் அதிர எழுந்த VBGRAMG சட்டம் ஒழிக! முழக்கம்!
-
“ஒட்டுமொத்த இந்தியாவிற்கான தமிழ்நாட்டின் குரல்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!