India
ஆசிரியையின் அலட்சியத்தால் வகுப்பறையில் உயிரிழந்த 5ம் வகுப்பு மாணவி: கேரளாவில் பரபரப்பு!
கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள சுல்தான் பத்தேரியில் உள்ள மேல்நிலை பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார் 10 வயது சிறுமி ஷகாலா.
வழக்கம் போல் நேற்றும் (நவ.,21) பள்ளிக்குச் சென்ற அந்த மாணவி பிற்பகல் 3.30 மணிக்கு வகுப்பறையில் இருந்த துளையில் காலை வைத்த போது ஏதோ கடித்தது போன்று தோன்றியதும் வெளியே காலை எடுத்துள்ளார்.
அதன் பிறகு ரத்தம் வந்ததால் பாம்பு கடித்ததாக உணர்ந்த சக மாணவர்கள் ஆசிரியையிடம் தகவல் தெரிவித்தனர். ஆனால், பெற்றோர் கவனித்துக் கொள்வார்கள் என அலட்சியமாக கூறிவிட்டு மீண்டும் ஆசிரியை பாடம் நடத்தியதாக கூறப்படுகிறது.
ஆகையால் ஒரு மணிநேரத்துக்கு பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் மாணவி உயிரிழந்துவிட்டதாக சோதித்து பார்த்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்ட கேரள அரசு, அலட்சியமாக இருந்த ஆசிரியையை சஸ்பெண்ட் செய்துள்ளது.
இதனையடுத்து, கேரள முதலமைச்சருக்கு இந்த சம்பவம் தொடர்பாக கடிதம் எழுதிய வயநாடு மக்களவைத்தொகுதி எம்.பி ராகுல் காந்தி, உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!
-
விழுப்புரம் ரூ.119.70 கோடி : 9,230 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!