India
அத்துமீறி ஏற்றப்பட்ட RSS கொடியை அகற்றிய அதிகாரி மீது வழக்கு : இந்துத்துவா மயமாகும் கல்வி நிலையங்கள் ?
உத்தரப்பிரதேசம் மாநிலம் மிர்சாபூரில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளது. பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்தக் கல்லூரியில் பயின்று வருகின்றனர். பல்கலைக்கழகத்திற்கு உள்ளே, எந்தவித முன் அனுமதியும் இல்லாமல் மத ரீதியான கூட்டங்கள் நடைபெறுவதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், அயோத்தி தீர்ப்பு வெளியானதையொட்டி, இந்துத்துவா கும்பலைச் சேர்ந்த ஒரு தரப்பினர் பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொடியை பறக்க விட்டு கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதனைக் கண்ட பல்கலைக்கழகத்தின் தலைமை துணை நிர்வாகி கிரண் தாம்லே இதுபோல கூச்சலிடுவதை நிறுத்திவிட்டு கொடியை அகற்றுங்கள் எனக் கூறியுள்ளார்.
ஆனால், கிரண் தாம்லே பேச்சைக் காதில் வாங்கிக் கொள்ளாத மாணவர்கள் மீண்டும் அதிக சத்ததுடன் கூச்சலிட்டுள்ளனர். அப்போது கல்வி நிறுவனத்தில் இதுபோல ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த ஆர்.எஸ்.எஸ் கொடியை பறக்கவிடுவது வளாகத்திற்குள் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் என்று கூறி கொடியை அகற்றும்படி கூறியுள்ளார்.
ஆனால், இதனை பொருட்படுத்தாது இருந்ததும் அருகில் இருந்த சக மாணவர்களிடம் அகற்றும்படி உத்தவிட்டார். அந்த கும்பலுக்குப் பயந்து கொடியை அகற்ற யாரும் முன்வராத நிலையில், அந்தக் கொடியை அவரே அகற்றியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சில மாணவர்கள் தம் மதத்தை அவமதித்துவிட்டதாகக் கூறி, அவரை ராஜினாமா செய்யவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மத உணர்வுகள் அவமதித்து விட்டார் என்று கூறி பல்கலைக்கழக நிர்வாகம் அவரைக் கட்டாய ராஜினாமா செய்ய வைத்துள்ளனர். அதோடு விடாமல், அப்பகுதியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஒருவர், திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ் கொடியை அகற்றி மத மோதலுக்கு பல்கலைக்கழகத்தின் பெண் அதிகாரி கிரண் தாம்லே வழி வகுத்துள்ளார் எனப் புகார் அளித்துள்ளார். அவரின் புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் கிரண் தாம்லே மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ் புகார் கொடுத்ததற்காக பல்கலைக்கழகத்தின் விதிமுறைகள்படி நடந்துக்கொண்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவம் சக அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து கல்வி நிலையங்களில் காவி சாயம் பூசும் போக்கு அதிகரித்து வருவதற்குக் கல்வியாளர்கள் பலத்த எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!