India
டாடா கொடுத்தது மட்டும் ரூ.350 கோடி- ஒரே ஆண்டில் 700 கோடி தேர்தல் நன்கொடை : பாஜகவின் வசூல் வேட்டை அம்பலம்!
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் 20 ஆயிரத்துக்கு மேல் நன்கொடை பெற்றால் அதை ரொக்கப் பணமாகப் பெறக்கூடாது. காசோலை அல்லது ஆன்லைன் பரிமாற்றம் மூலம் பெறவேண்டும் என தேர்தல் விதிமுறை இருக்கிறது.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் அரசியல் கட்சிகள் தாங்கள் பெற்ற நன்கொடை குறித்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்பது விதிமுறையில் உள்ளது. இந்நிலையில், தற்போது பா.ஜ.க அளித்துள்ள அறிக்கையில் நாட்டின் மிகப்பெரிய கார்ப்பரேட் முதலாளிகளிடமிருந்து, 2018-19 ம் ஆண்டில் மட்டும் ரூ.700 கோடியை தேர்தல் நன்கொடையாக பா.ஜ.க பெற்றுள்ளது.
இதில் பெரும் பகுதி தொகை டாடா நிறுவனம் நிர்வகிக்கும் அறக்கட்டளை மூலம் வந்துள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக, டாடா நிறுவனத்தின் கீழ் இயங்கும் புரோகிரஸிவ் எலக்ட்ரோல் டிரஸ்ட் அமைப்பு மூலம் சுமார் 356 கோடி ரூபாயை பா.ஜ.க-வுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், புருடென்ட் எலக்ட்ரோல் டிரஸ்ட் 54.25 கோடி ரூபாயும், ஹீரோ மோட்டோகார்ப் ரூபாய் 12 கோடியும் வழங்கியுள்ளது. மேலும் பார்தி குழுமம், ஜூப்ளியன்ட் புட்வொர்க்ஸ், ஓரியண்ட் சிமென்ட், டி.எல்.ப், ஜே.கே டயர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் பா.ஜ.க-வுகு அதிகமான நன்கொடை அளித்துள்ளனர்.
இந்த நன்கொடைகள் பெரும்பாலும் ஆன்லைன் பரிமாற்றம், காசோலை ஆகியவை மூலம் தனி நபர்களிடம் இருந்தும், நிறுவனங்களிடம் இருந்தும் பெற்ற நன்கொடை மட்டுமே. தேர்தல் நிதிப்பத்திரங்கள் வாயிலாக எவ்வளவு நிதி வந்தது என்பது குறித்துக் குறிப்பிடவில்லை. அந்த தகவலும் வரும்போது இந்ததொகை அதிகரிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!