India
சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் தான் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் - சஞ்சய் ராவத் உறுதி!
மகாராஷ்டிரா மாநில சட்டசபைத் தேர்தல் இம்மாதம் 21ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த 24ம் தேதி நடைபெற்றது. மொத்தமுள்ள 288 இடங்களில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 45 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 52 இடங்களையும் கைப்பற்றியது.
எதிர் தரப்பில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜ.க 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் பிடித்தது. எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைப்பதற்குத் தேவையான தொகுதிகளைப் பெற்றுள்ளது. இருப்பினும் இரு கட்சிகளிடையே 50:50 என்ற சமமான அதிகாரப் பகிர்வு குறித்த சிக்கலால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.
பா.ஜ.க.வுடன் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சிவசேனா கூட்டணி அமைக்கும் என்றும் பேச்சு அடிபடுகிறது.
இவ்வாறான குழப்பங்களுக்கு இடையே, சிவசேனா கட்சியின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத், 'மகாராஷ்டிராவில் முதல்வர் போட்டியில் சிவசேனா கட்சிதான் வெற்றி பெறும். பாஜகவுடன் பேச்சுவார்த்தை என்றால் அது முதல்வர் பதவி குறித்து மட்டுமே இருக்கும்.
மகாராஷ்டிராவில் அரசியல் மாறிக்கொண்டே இருக்கிறது. சிவசேனா காட்சியைச் சேர்ந்தவர் தான் முதல்வராக வேண்டும் என்று மக்களும் விரும்புகிறார்கள். முதல்வர் பதவியில் சமபங்கு என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இது நீதிக்கான போராட்டம். இந்த போராட்டத்தில் சிவசேனாவுக்கே வெற்றி கிடைக்கும். சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் தான் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர்' என்று கூறியுள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!