India

மிகப் பெரிய டேட்டா திருட்டு: உங்கள் கிரெடிட் டெபிட் தகவல்கள் பத்திரமா? - கோட்டை விட்ட பா.ஜ.க அரசு!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் கூட்டாட்சி நீதிமன்றத்தில், கடந்த வாரம் ஒரு வழக்கு நடந்தது. அதில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ (NSO) என்ற நிறுவனம் தகவல் திருட்டில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வாட்ஸ்அப் நிறுவனம் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், என்.எஸ்.ஓ நிறுவனம் ’பெகாசுஸ்’ என்ற மென்பொருள் மூலம் சுமார் 1400 தனி நபர்களை கண்காணித்தது தகவல் திருட்டில் ஈடுபட்டது என வாட்ஸ்அப் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இந்திய மக்களின் வாட்ஸ்அப் தகவல்களை உளவு பார்ப்பததாகவும், குறிப்பாக இந்திய பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் வாட்ஸ் அப் தகவலை என்.எஸ்.ஓ நிறுவனம் உளவு பார்ப்பதாக தெரிவித்தது.

இந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியே அதே சமயத்தில், சிங்கப்பூரைச் சேர்ந்த குரூப் - ஐபி என்ற பாதுகாப்பு ஆராய்ச்சிக் குழு சமீபத்தில் உலகம் முழுவதும் நடைபெற்ற ஒரு மிகப்பெரிய சைபர் கிரைம் திருட்டு பற்றி தகவலை வெளியிட்டுள்ளது. இணையம் மூலம் திருடப்படும் தகவல்கள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக பகீர் கிளப்பியுள்ளது.

இதில், மற்றொரு அதிர்ச்சி தகவல் என்னவெனில் ஹேக் செய்யப்பட்ட தகவல்களில் 98 சதவிதம் இந்தியர்களின் தகவல் என குறிப்பிட்டுள்ளது. சுமார் 13 லட்சம் இந்தியர்களின் கிரெடிட், டெபிட் கார்டு விவரங்கள் ஆன்லைனில் விற்பனைக்கு வெளியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ சுற்றரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இந்திய நாட்டுமக்களின் தகவல்களை பாதுகாப்பதற்கு மிகப்பெரிய பங்கினை வகுக்கும் மத்திய அரசே சைபர் குற்றங்களைத் தடுக்காமல் இருப்பது தொழில்நுட்ப வல்லுநர்களை மேலும் அச்சப்பட வைத்துள்ளது.

முன்னதாக வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியர்களின் தகவல் உளவு பார்க்கப்படுவதாக மே மாதமே மத்திய அரசுக்கு எச்சரித்ததாகவும், பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்யம்படி கூறி இருந்தோம் என கூறுகிறது வாட்ஸ்அப்.

ஆனாலும், மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு இத்தைய தகவல் திருட்டு சம்பவங்களை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. பா.ஜ.க அரசின் சைபர் பிரிவு, சமூக வலைதளங்களில் மத்திய அரசை விமர்சிப்பவர்களை கண்காணிக்கும் வேலையை மட்டுமே செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

செல்போன் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசுக்கு தொடர்பிருப்பதாக காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “மத்திய அரசின் சில அமைப்புகள் உளவு பார்க்கும் மென்பொருளை உருவாக்கி அதை உலவ விட்டு தகவல்களை உளவு பார்த்து வருகிறது. தனிநபர் தகவல் பாதுகாப்பு ஒவ்வொருவரின் உரிமையாக உள்ள நிலையில் அதை மீறும் வகையில் பா.ஜ.க அரசின் செயல்பாடுகள் இருக்கிறது’’ என தெரிவித்துள்ளார்.