India
விரைவில் வருகிறது சமூக வலைத்தளங்களுக்கான கட்டுப்பாடு - பயனாளர்களைக் கண்காணிக்க முடிவு ?
ஃபேஸ்புக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க கோரிய வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தீபக் குப்தா அமர்வில் விசாரணக்கு வந்தது. அப்போது, சமூக வலைதளங்களுக்கான கட்டுப்பாடு நெறிமுறைகளை வகுக்க மத்திய அரச மேலும் மூன்று மாதகால அவகாசம் கோரி மனுதாக்கல் செய்தது.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான சோலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இணையதள சட்டபிரிவு 69ன் படி கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசுக்கு உரிமை இருப்பதாகத் தெரிவித்தார்.
அதனடிப்படையில் நெறிமுறைகளை வகுக்க பல்வேறு துறைகளுடன் மத்திய அரசு ஆலோசனைகளை நடத்தி வருவதாகக் கூறினார். ஜனவரி 15ம் தேதி அந்த புதிய வழிகாட்டி நெறிமுறைகள் அமலுக்கு வந்துவிடும் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, சென்னை உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்று ஃபேஸ்புக் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதனை, எற்ற நீதிபதிகள் அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும், வழக்கை ஜனவரி இறுதி வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!