India
“மக்களால் மிட்டாய் கூட வாங்க முடியவில்லை” : கடுமையாக சரிந்த கிராமப்புற நுகர்வு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதாக கூறிவிட்டு மக்கள் மத்தியில் மத மோதல்களையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
பா.ஜ.கவின் தவறான பொருளாதார கொள்கைகளான பணமதிப்பு நீக்கம், முறையற்ற ஜி.எஸ்.டி போன்றவற்றால் இந்திய பொருளாதாரம் படிப்படியாகச் சரிந்து வருகிறது.
குறிப்பாக சிறு மற்றும் குறு தொழில்கள் முற்றிலும் முடங்கி இழுத்து மூடப்படும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் கிராமப்புறங்களில் வாழும் மக்கள் தங்களின் நுகர்வுகளை வெகுவாக குறைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆய்வு நிறுவனமான ‘நீல்சன்’ (Nielsen) ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டு நுகர்வு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, அதனடிப்படையிலான அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கிராமப்புற நுகர்வு அதிவேகமாக சரிந்திருப்பதாக ‘நீல்சன்’ அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தொழிற்துறைகள் மந்த நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், நுகர்வுப் பொருட்களின் துறையிலும் மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக ‘நீல்சன்’ தெரிவித்துள்ளது.
குறிப்பாக, குளிர்பானம், பதப்படுத்தப்பட்ட உணவுகள், மலிவுவிலை மிட்டாய்கள் போன்றவை அதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருட்களாக கருதப்படுகின்றன. விலை குறைவான இந்தப் பொருட்கள் கிராமப்புற சந்தைகளில் அதிகம் விற்பனையாகக் கூடியவை.
அதிவேகமாக நுகரும், நுகர்வோர் பொருட்கள் விற்பனையில் - ஒட்டுமொத்த வளர்ச்சியில் 36%, கிராமப்புறங்களை நம்பியே உள்ளது. ஆனால், கிராமப்புற சந்தைகளில் ஏற்பட்டுள்ள விற்பனை வீழ்ச்சியால், அதிவேக நுகர்வு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2018ம் ஆண்டில் 20 சதவிகிதமாக இருந்த இந்த நுகர்வு வளர்ச்சி விகிதம், இந்த ஆண்டு வெறும் 5 சதவிகிதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த வீழ்ச்சி, கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத மிகமோசமான அளவு என்று ‘நீல்சன்’ தெரிவிக்கிறது.
முன்னதாக, இந்தியாவில் உணவு உற்பத்தியில் பெரும் லாபம் ஈட்டிவரும் பிரிட்டானியா நிறுவன இயக்குநர், “பொருளாதார வீழ்ச்சியினால் மக்களால் ஐந்து ரூபாய் பிஸ்கட் வாங்க முடியவில்லை.” என வருத்துத்துடன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!