India
உலகிலேயே அதிக முறை தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டது எங்கு தெரியுமா? - அதிர்ச்சி தரும் புள்ளிவிபரம்!
ஜம்மு காஷ்மீரில் 72 நாட்களுக்குப் பின்னர் தொலைத்தொடர்பு சேவை மீண்டும் செயல்படத் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் உலகிலேயே இந்தியாவில் தான் அதிக முறை தொலைத்தொடர்பு சேவை முடக்கப்பட்டு இருப்பதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர் நடந்த முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 370 சிறப்பு பிரிவை ரத்து செய்தது.
ஆகஸ்ட் 5ம் தேதி மாநிலங்களவையில் சட்டப்பிரிவை ரத்து செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதற்கு முந்தைய நாள் நள்ளிரவு முதல் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டது. 72 நாட்களுக்குப் பின்னர் தற்போது தொலைத்தொடர்பு சேவை தொடங்கப்பட்டு இருக்கிறது.
2016ம் ஆண்டு முதல் இப்போது வரை அதிகப்படியாக ஜம்மு காஷ்மீரில் 183 முறையும், ராஜஸ்தான் மாநிலந்தில் 43 முறையும் தொலைத் தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டு இருக்கிறது.
2019ம் ஆண்டு மட்டும் 67 முறை ஜம்மு காஷ்மீரில் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டு இருக்கிறது. பொது பாதுகாப்பு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைக்காக அதிக முறை தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறது.
தேசிய பாதுகாப்புக்காக 26 முறை துண்டிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ,108 முறை எந்தக் காரணத்திற்காக முடக்கப்பட்டது என்று சொல்லப்படவில்லை.
எத்தியோப்பியாவில் 2017 டிசம்பர் தொடங்கி 2018 ஏப்ரல் வரை 110 நாட்கள் தொலைத்தொடர்பு முடக்கப்பட்டு இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் புர்கான் வாணி கொல்லப்பட்டபோது அதிகபட்சமாக 2016 ஜூலை முதல் ஜனவரி 2017 வரை தொலைத்தொடர்பு சேவைகள் 6 மாத காலம் துண்டிக்கப்பட்டது.
Also Read
-
தமிழ்நாட்டை வஞ்சிக்கிற போக்கு தொடருமேயானால்... : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
-
“அமைதியும் எளிமையுமிக்கவர்... திரைப்பாசம் குடும்ப பாசமானது..” - AVM சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!
-
சென்னை மாநகர செரீப்.. எழுத்தாளர்... தயாரிப்பாளர்... பன்முக கலைஞர் AVM சரவணன் காலமானார்!
-
SIR பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள இதுவே நோக்கம்... புட்டுப்புட்டு வைத்த முரசொலி தலையங்கம்!