India
உணவு தினத்தைக் கொண்டாடுகிறோம்: ஆனால், பசிக்கொடுமை உள்ள நாடுகளில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
உலகளாவிய பசி குறியீடு பட்டியல் அண்மையில் வெளியாகி உள்ளது. உலக அளவில் பசி மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் வாடுபவர்களை கணக்கெடுத்து அதன் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான பசி குறியீடு பட்டியலின்படி, இந்தியா பசிக்கொடுமை பிரச்னையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
117 நாடுகள் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் இந்தியா 102-வது இடத்தில் உள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், வங்காளதேசம் நாடுகளை விட பின்தங்கிய நிலையில் இந்தியா உள்ளது.
2000-ஆம் ஆண்டில், 113 நாடுகள் கொண்ட பசி குறியீடு பட்டியலில் இந்தியா 83-வது இடத்தைப் பிடித்திருந்தது. இப்போது, 117 நாடுகள் பட்டியலில் உள்ள நிலையில், இந்தியா 102-வது இடத்திற்கு பின்னடைவைச் சந்தித்துள்ளது.
பெலாரஸ், உக்ரைன், துருக்கி, கியூபா மற்றும் குவைத் உள்ளிட்ட பதினேழு நாடுகள் ஐந்துக்கும் குறைவான குறியீட்டு எண்களுடன் முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சென்னை மெட்ரோ இரயில் : பூந்தமல்லி To போரூர் வழித்தடத்தில் சோதனைகள் நிறைவு !
-
சென்னை நுங்கம்பாக்கத்தில் ‘ஜெய்சங்கர்’ பெயரில் சாலை! : தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு!
-
கல்வித்தகுதியை பொது வெளியில் சொல்ல பிரதமர் மோடிக்கு என்ன தயக்கம்? : ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!
-
தேசிய நலனுக்கு மாறாக பாகிஸ்தானுடன் கிரிக்கெட் மட்டும் விளையாடலாமா? : காங்கிரஸ் கேள்வி!
-
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! : 20.59 லட்சம் தொடக்கப் பள்ளி மாணாக்கர்கள் பயன்பெறுவர்!