India
“தடுமாற்றத்தில் உள்ள இந்திய பொருளாதாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பே இல்லை” : நோபல் அறிஞர் அபிஜித் கருத்து!
மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவில் மோசமான நிதிநிலை நெருக்கடியில் நாடு சிக்கித் தவிப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சி 1.1 சதவிகிதமாகக் குறைந்துவிட்டதாகவும், அதில், உற்பத்தி துறையிலும், வேளாண் துறையிலும் ஏற்பட்ட சரிவே, சமீபத்திய மந்தநிலைக்கு காரணம் என மத்திய புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்கத்துறை கூறியிருந்தது.
இந்நிலையில் நடப்பாண்டில் பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி இந்திய பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருப்பதாகவும், தற்போதைய புள்ளிவிவரங்களைப் பார்த்தால், விரைவில் மீட்சியடையும் என்று உறுதியாகக் கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் அபிஜித் பானர்ஜி பேசுகையில், “இந்தியாவின் மந்தநிலைக்கு பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி போன்றவற்றை அமல் செய்ததே காரணம்” என குற்றம் சாட்டினார்.
மேலும் “இந்தியாவில் முதலீடு செய்து தொழில் நடத்துவது கடினம் என அந்தத் துறையில் இருக்கும் எனது நண்பர்கள் அண்மையில் தெரிவித்தனர். கடந்த 4 ஆண்டுகளாக நுகர்வு என்பது குறைந்துகொண்டே செல்கிறது.
இதுபோன்ற தேக்கநிலைமை கடந்த 10 ஆண்டுகளில் நடந்ததே இல்லை. அதுமட்டுமின்றி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் முதலீடுகளில் 75 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. அதேபோல தான் ஏற்றுமதியும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இது பெரும் பிரச்னை” என்றார்.
மேலும் பேசிய அவர், “இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை தற்போது நிலையற்றதாக உள்ளது. தற்போதுள்ள புள்ளிவிவரங்களை வைத்துப் பார்க்கும்போது பொருளாதாரம் விரைவில் மீட்சியடையும் என உறுதியாகக் கூற முடியாது. கடந்த 5 அல்லது 6 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தில் ஓரளவு வளர்ச்சி இருந்ததது. தற்போது அதுவும் இல்லை” என அவர் தெர்வித்துள்ளார்.
Also Read
-
“ஓடி ஒளியும் அவசியம் தி.மு.க.வினருக்கு என்றுமே கிடையாது!” : சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எ.வ.வேலு!
-
வியட்நாமில் கவிழ்ந்த சுற்றுலாப் படகு.. 10 தமிழர்கள் பலி.. மகிழ்ச்சியான இடத்தில் நிகழ்ந்த அசம்பாவிதம்!
-
நெல்லையில் நடந்த கொடூரம்.. சுற்றி வளைத்த கும்பல்.. ரத்த வெள்ளத்தில் மிதந்த உடல்.. அச்சத்தில் மக்கள்!
-
“இனிமையும் இளமையும் மாறாத குரல்.. கானகோகிலம் எஸ்.ஜானகி மறைவு பேரிழப்பு” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
‘இசை உலகின் மகுடம் எஸ்.ஜானகி காலமானார்.. 17 மொழிகள்.. 40,000+ பாடல்கள்.. காலத்தால் அழியாத குரல்’