India
காதலிக்க மறுத்ததால் மாணவி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை : தன் மீதும் பெட்ரோல் பட்டதால் இளைஞர் பலி!
கேரளா மாநிலம் கொச்சி பகுதியில் 17 வயது மாணவி ஒருவர் விடுமுறைக்காக உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு பக்கத்து வீட்டில் இருக்கும் மிதுன் என்ற இளைஞருடன் நட்பாகப் பழகிவந்துள்ளார்.
பின்னர் நாளடைவில் மிதுன் காதலிப்பதாக அந்த மாணவியிடம் தெரிவித்துள்ளார். சிறுமிக்கு விருப்பம் இல்லாததால் மறுத்துவிட, மீண்டும் மீண்டும் திருமணம் செய்யும்படி மிதுன் அந்தப் பெண்ணிடம் வற்புறுத்தியுள்ளார்.
ஒருகட்டத்தில் மிதுனின் தொல்லை தாங்க முடியாமல், கடந்த 7ம் தேதி மாணவியின் குடும்பத்தினர் கொச்சின் போலிஸில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் வழக்குப் பதிவு செய்யாமல் மிதுனை அவரது பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு சிறப்பு வகுப்புக்குச் சென்றுவிட்டு அந்த மாணவி வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மிதுன் அவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அச்சமடைந்த மாணவி வீட்டுக்கு ஓடிவந்துள்ளார்.
ஆனால், மிதுன் பின்தொடர்ந்து வந்துள்ளார். இதனைப்பார்த்த மாணவியின் தந்தை மிதுனை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மிதுன் சிறுமியின் தந்தையுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தனது தந்தையை வீட்டுக்குள் அழைத்துச் செல்வதற்காக சிறுமி வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.
அப்போது தனது மோட்டார் வாகனத்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை சிறுமியின் மீது உற்றி தீ வைத்தார் மிதுன். சட்டென பற்றிய தீ சிறுமியின் உடல் முழுவதும் பரவியது. இதில் மிதுன் மீதும் பெட்ரோல் பட்டதால் இருவர் மீதும் தீ பற்றியது.
மகளைக் காப்பாற்ற மாணவியின் தந்தை முயற்சித்தும் காப்பாற்ற முடியாமல் போனது. மாணவியின் தந்தைக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டது. தீ விபத்தில் மாணவியும், அவருக்குத் தொல்லை கொடுத்த மிதுனும் பலத்த தீக்காயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த எர்ணாகுளம் போலிஸார் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!