India
“பாகிஸ்தானிலிருந்து வந்துள்ளீர்களா?” : ‘பாரத் மாதா கீ ஜே’ சொல்லாத மக்களை வசைபாடிய பா.ஜ.க வேட்பாளர்!
அரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 21ம் தேதி நடைபெறவுள்ளது. பா.ஜ.க சார்பில் டிக்டாக் பிரபலமான நடிகை சோனாலி போட்டியிடுகிறார். கடந்த வாரம் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து தற்போது தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆதம்பூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் நடிகை சோனாலி பால்சமந்த் கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு கூடியிருந்த மக்களைப் பார்த்து கைகளை அசைத்து ‘பாரத் மாதா கி ஜே’ என்று கூறி, மீண்டும் கோஷம் எழுப்பும்படி வலியுறுத்தினார். ஆனால் மக்கள் ஆர்வமில்லாமல் இருந்துள்ளனர்.
இதனால் அத்திரமடைந்த சோனாலி, “நீங்கள் எல்லாரும் பாகிஸ்தானில் இருந்து வந்துள்ளீர்களா?, நீங்கள் இந்தியர்கள் என்றால் பாரத் மாதா கீ ஜே என்று சொல்லுங்கள்; உங்களால் நாட்டுக்காக ஜே எனக் கூற முடியாதா, உங்களையெல்லாமல் நினைத்து வெட்கப்படுகிறேன்.” என்று கோபமாகப் பேசிய அவர், “பாரத் மாதா கீ ஜே என்று சொல்ல முடியாதவர்களின் வாக்குகளுக்கு மதிப்பில்லை” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
அவரது பேச்சுக்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போது அவர் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மூன்று முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ- வாக இருக்கும் குல்தீப் பிஸ்ஸோனா, சோனாலிக்கு எதிராகப் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
நமக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!
-
சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டம் - நவீன வசதிகளுடன் ரயில் நிலையங்கள் : ரூ.250.47 கோடி ஒப்பந்தம்!
-
அமைச்சர் பதவியை பறிக்கும் மசோதா : ஒன்றிய அரசின் திட்டத்திற்கு செக் வைத்த இந்தியா கூட்டணி!
-
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தொடரும் பாலியல் குற்றச்சாட்டு : போராடிய மாணவர்கள் மீது தடியடி!
-
25 ஆண்டுகள் - பிரதமர் மோடியின் அடையாளம் இதுதான் : முரசொலி தலையங்கம்!