India

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை முழு வீச்சில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்!

சாலை விபத்துகளை குறைக்கவும், விதிமீறல்களை தடுக்கவும் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி விதிமீறல்களுக்கான அபராதம் முன்பு இருந்ததை விட பன்மடங்கு உயர்த்தப்பட்டது.

இதனையடுத்து, வட மாநிலங்களில் உள்ள சில பகுதிகளில் ஆயிரக்கணக்கில், லட்சக் கணக்கில் அபராதங்கள் விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையான சிரமத்துக்கு ஆளாகினர்.

இந்த நிலையில், புதிய மோட்டார் வாகனச் சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு இருந்தாலும், பெரும்பாலான மாநிலங்களில் செயல்படுத்தாமல் உள்ளது.

குஜராத், உத்தரகாண்ட், கேரளா, அசாம், கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களில் மட்டுமே புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அபராதங்களை நிர்ணயித்துக் கொள்ள மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

இருப்பினும், அனைத்து மாநிலங்களிலும் இந்த சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் ஆலோசித்து வருகின்றது.