India
அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம்? - மத்திய அரசிடம் அனுமதி கேட்ட தேர்வு முகமை!
நீட் தேர்வின் போது நடைபெறும் ஆள்மாறாட்டங்களை தடுக்க தேசிய தேர்வு முகமை புதிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள்.
அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதன் மூலம் இர்ஃபான், ப்ரவீன், ராகுல் ஆகிய மாணவர்களும் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் சிபிசிஐடி போலிஸார் இன்னும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், எதிர்காலத்தில் இது போன்று பிரச்னைகள் ஏற்படாத வகையில் நீட் தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது.
அதில், அடுத்த ஆண்டு முதல் நடைபெறும் நீட் தேர்வுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு மத்திய அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் மாணவர்களின், கைரேகை மற்றும் கருவிழி படலத்தின் ஸ்கேன் போன்ற பயோ மெட்ரிக் தரவுகள் சேகரிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இந்த சேகரிக்கப்படும் தரவுகள் விண்ணப்பத் தேர்வு, கலந்தாய்வு, அனுமதி ஆகிய நடைமுறைகளின் போது சரிபார்க்கப்படும் என்றும், இதன் மூலம் நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கமுடியும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
Also Read
-
ஜனநாயகத்தின் குரல்வளையை தன் பூட்ஸ் காலால் நெறிக்கும் த.வெ.க அரசு : தி.மு.க ஆவேசம்!
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!