India
9 வருடங்களுக்கு முன்பு பதிவிட்ட ட்வீட்டால் மாட்டிக்கொண்ட ஸ்மிருதி இரானி!
வெங்காயம் உற்பத்தி செய்யப்படும் மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் வெங்காய உற்பத்தி கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. உற்பத்தி மற்றும் வரத்து இல்லாததால் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூபாய் 80 வரை சென்றுள்ளது.
சமையல் வெங்காயம் இன்றி முழுமை பெறாது. எல்லா வகையான சமையலுக்கும் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருளான வெங்காயத்தின் விலை உயர்வு நடுத்தர ஏழை மக்களை கவலை கொள்ளச் செய்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் வரை தமிழகத்தில் ஒரு கிலோ வெங்காயம் ரூபாய் 20 என்ற அளவில் இருந்தது. இப்போது 70 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
வெங்காய விலை கடுமையாக உயர்ந்ததுக்கு மழை மட்டுமல்லாமல் பதுக்கலும் காரணம் எனக் கூறப்படுகிறது. பெரும் வர்த்தகர்கள் வெங்காயத்தை விற்பனை செய்யாமல் பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, விலையை அதிகரிக்கச் செய்து சிறிது சிறிதாக விற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாட்டின் பொருளாதார நிலைமை சரிவுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், எல்லாத் துறைகளும் ஆட்டங்காணத் தொடங்கியிருக்கின்றன. இந்தச் சூழலில் வெங்காய விலை உயர்வு மத்திய அரசுக்கு கவலையளிக்கக்கூடியதாகவே உள்ளது. நடுத்தர, ஏழை வர்க்கத்தினரை நேரடியாகப் பாதிக்கும் இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை ஏதும் எடுப்பதாகத் தெரியவில்லை.
இந்நிலையில், ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் பழைய ட்வீட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. கடந்த 2010ம் ஆண்டு வெங்காயம் விலை உயர்ந்தபோது, “வெங்காயம் வாங்காதீர்கள்... வருமான வரித்துறை உங்கள் அதிகப்படியான செலவுகளைக் கண்காணிக்கிறது” என கிண்டலாக ட்வீட் செய்திருந்தார் ஸ்மிருது இரானி.
தற்போது, ஸ்மிருதி இரானியின் ட்வீட்டையே சுட்டிக்காட்டி, நெட்டிசன்கள் பா.ஜ.க ஆட்சியை கிண்டல் செய்து வருகின்றனர்.
Also Read
-
கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை... சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கிய மேயர் பிரியா !
-
120- க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டெடுத்த ரயில்வே துறை... சாத்தியமானது எப்படி ?
-
"SIR குறித்து மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை" - தி.க தலைவர் கி.வீரமணி !
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!