India
சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த அதிநவீன சொகுசு விமானம் யாருடையது? - வெளிவந்த ஆச்சர்ய தகவல்!
‘டன்கிர்க்’ படத்தைத் தொடர்ந்து ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் தனது அடுத்த படமாக ‘டெனட்’ படத்தை இயக்குகிறார். ‘டெனட்’ படப்பிடிப்புக்காக நோலன் இந்தியா வந்துள்ளார்.
கிறிஸ்டோபர் நோலனின் திரைக்கதைக்கு என்றே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. நோலனின் டார்க் நைட், இன்ஸப்ஷன், இன்டர்ஸ்டெல்லர் ஆகிய படங்கள் மிகப்பெரும் வரவேற்பு பெற்றன.
அந்த வகையில் தற்போது நோலன் இயக்கும் ‘டெனட்’ படமும் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்தில் இந்தியாவின் பிரபல நடிகை டிம்பிள் கபாடியா நடித்து வருகிறார். அவர் தொடர்பான காட்சிகள் தற்போது இந்தியாவில் எடுக்கப்படுகின்றன.
கிறிஸ்டோபர் நோலன், இந்திய நகரங்களில் வலம் வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதற்கிடையே, கடந்த செப்டம்பர் 13ம் தேதி நோலனின் ‘கிறிஸ்டல் ஸ்கை’ சிறப்பு விமானம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்தது தெரியவந்துள்ளது.
தனியார் விமானங்களில் அதிநவீன சொகுசு வசதிகளுடன் கூடிய விமானம் இது என தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில், இந்த அதிசொகுசு விமானம் யாருடையது என சென்னை விமான நிலைய வட்டாரம் தெரிவிக்க மறுத்துள்ளது.
பின்னர், இந்த விமானம் கிறிஸ்டோபர் நோலனின் ‘டெனட்’ படக்குழுவினர் பயன்படுத்தியது எனவும், ஓய்விற்காக சென்னை வந்ததும் தெரியவந்தது. இந்த விமானம் மீண்டும் செப்டம்பர் 23ம் தேதி அதிகாலை சென்னையிலிருந்து மும்பைக்கு கிளம்பிச் சென்றது.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!