India

ஆந்திராவின் முன்னாள் சபாநாயகர் கோடல்ல சிவபிரசாத் தூக்கிட்டு தற்கொலை : காரணம் என்ன?

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சியின் போது ஆந்திர சட்டப்பேரவை சபாநாயகராக கோடல்ல சிவபிரசாத் இருந்துவந்தார்.

மேலும், என்.டி.ராமராவ் தலைமையிலான அரசில் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். ஆந்திர பிரதேசம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு, பதவியேற்ற முதல் சபாநாயகர் என்ற பெருமையைப் பெற்றவர் சிவபிரசாத் ராவ்.

இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் சிவபிரசாத் இன்று தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். உடனடியாக இவரைக் காப்பாற்ற பசவாடரகம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சிவபிரசாத் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவரது மறைவுக்கு ஆந்திராவில் உள்ள அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது மறைவு ஆந்திர அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது தற்கொலைக்கான காரணம் வெளிவரவில்லை. ஆனால், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசு சிவபிரசாத் மீது 15 வழக்குகளை போட்டதால்தான் மனஉளைச்சலில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெலுங்கு தேசம் கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.