India
எல்லையில் பதற்றம்: கட்டுப்பாட்டு லடாக்கில் ரோந்து செல்ல இந்திய ராணுவ வீரர்கள் முயற்சி? தடை விதித்த சீனா!
மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதில் இருந்து அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இது ஜம்மு - காஷ்மீர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனையடுத்து, இந்தியாவுடனான நட்புறவை முறியடித்துக் கொள்வதாக பாகிஸ்தான் அறிவித்தது. பாகிஸ்தானுக்காக அனுப்பப்பட்ட இந்திய தூதரை திருப்பி அனுப்பியது. இந்தியாவில் இருந்து செயல்பட்டு வந்த வாகன சேவைகளையும் நிறுத்தியது.
லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்ததற்குச் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. மேலும், இந்திய-சீன எல்லையில் மேற்குப் பிரிவில் இருக்கும் பகுதியை இந்தியா சேர்த்துக் கொள்வதைச் சீனா எப்போதும் எதிர்த்து வந்துள்ளது. இந்த நிலைப்பாட்டில் சீனா எப்போதும் தெளிவாக உள்ளது.
சீனாவின் பிராந்திய இறையாண்மைக்கு எதிராக இந்தியா சட்டங்களைத் திருத்தி மாற்றியுள்ளதை ஏற்க முடியாது என்று அந்நாடு முன்பே எச்சரிக்கை விடுத்தது. அதன்பின்பு ஐ.நாவின் கூட்டத்தில் சீனா இதுகுறித்து பேச இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் லடாக் பகுதியில் ரோந்து செல்ல முயன்ற இந்திய ராணுவ வீரர்களை சீனா ராணுவ வீரர்கள் தடுக்க முயற்சித்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா - சீனா நாட்டுப்படைகளுக்கு இடையே மோதல் போக்கு உருவானது. இதனால் இருநாட்டு எல்லையிலும் பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.
பான்காங் த்சோ (Pangong Tso) ஏரியின் வடக்கு கரையில் சுமார் உள்ள 134 கிலோமீட்டர் தூரம் கொண்ட நிலப்பகுதியில் மூன்றில் இரண்டு பங்கை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை அப்பகுதியில் ரோந்து சென்ற இந்திய வீரர்களுக்கு, சீன ராணுவ வீரர்கள் தடை விதித்தனர். அப்போது தங்கள் பகுதியில்தான் ரோந்து செல்வதாக இந்திய வீரர்கள் கூறியுள்ளனர்.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் பதற்றத்தை உண்டாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோதல்களால் இந்திய எல்லைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!