India
“தமிழ் தெரியாத அதிகாரிகளால் நிர்வாகச் சிக்கல்” : புதுச்சேரி முதல்வர் குமுறல்!
புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று காலை உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து பேசுகையில் முதல்வர் நாராயணசாமி, 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளதால் இத்திட்ட சாதக பாதங்களைப் பார்த்து சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து தான் இதுதொடர்பாக முடிவு செய்யப்படும்.
புதிய வாகன திருத்த சட்டம் தொடர்பாக மக்களிடையே முதலில் விழிப்புணர்வு ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்," என்று தெரிவித்தார்.
பேரவையில் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தமிழில் பேசும் சூழலில் அதை அதிகாரிகள் அறிந்து புரிந்துகொள்கிறார்களா என்று அரசு கொறடா அனந்தராமன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் நாராயணசாமி, "புதுச்சேரியில் உள்ள உயரதிகாரிகளாக தமிழ் தெரிந்தவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தி வரும் நிலையில் அதிகளவில் இந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்த அதிகாரிகளை மட்டுமே நியமித்து வருகிறது. இதனால் நிர்வாகச் சிக்கல் ஏற்படுகிறது. ஆகவே தமிழ் தெரிந்த அதிகாரிகளை அதிகப்படியாக நியமிக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்," என்று கூறினார்.
Also Read
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!
-
“CBSE பள்ளிகளுக்கு NOC சான்றிதழ்.. சட்டம் தெரியுமா? தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கூறும் பொய்!”
-
உணவுக்குப் பதில் பிஸ்கட் : காலை உணவு திட்டத்தில் அலட்சியம் காட்டும் த.வெ.க அரசு!
-
“நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயல்” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!