India
8% ஆக அதிகரித்த வேலை வாய்ப்பின்மை: மோடி அரசின் 10 லட்சம் வேலைவாய்ப்பு திட்டம் என்ன ஆனது?
இந்தியாவின் பொருளாதார நிலை, இதுவரை பார்த்திராத அளவுக்கு நலிவடைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஆனால் மத்திய பாஜக அரசோ, நாட்டில் பொருளாதார சரிவே ஏற்படவில்லை என மூடி மறைத்து வருகின்றனர். இந்த நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் 8 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கிராம மற்றும் நகர்புறங்களில் வேலையில்லாத் திண்டாட்டம் 7.8ல் இருந்து 9.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு தேர்தலின் போது பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என அளித்த வாக்குறுதியை இரண்டாவது முறையாக பதவியேற்றப் பிறகும் நிறைவேற்றவில்லை என ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேபோன்று சேவைத் துறைகளின் வளர்ச்சியும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Also Read
-
”இடஒதுக்கீடு கொள்கையின் பிதாமகன் தமிழ்நாடு” : சட்டப்பேரவையில் அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
”இன்ஸ்டா ரீல்ஸ் அரசியல் செய்யும் பழனிசாமி” : அமைச்சர் சிவசங்கர் பதிலடி!
-
தமிழ்நாட்டை தண்டிப்பது ஏன்? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு 10 கேள்விகளை எழுப்பிய அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
BLINKIT வணிக தளத்தில் ‘கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகள்!’ : முழு விவரம் உள்ளே!
-
இரட்டை இலக்கை எட்டிய தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமை!