India
ஆம்புலன்ஸூக்கு பணம் இல்லை; மகளின் சடலத்தை கையில் ஏந்தி சென்ற தந்தை : தெலங்கானாவில் நடந்த அவலம் !
இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலன கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கு மருத்துவ வசதிகள் இன்னும் ஓரளவுக்குக் கூட பூர்த்தி செய்யப்படாமல் இருக்கின்றது. சிகிச்சையளிக்கத் தான் போதிய வசதி இல்லை என்றால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் சடலத்தை எடுத்துச் செல்வதற்கு வாகன வசதிகளைக் கூட அரசாங்கத்தால் ஏற்படுத்தித் தர முடியாத அவல நிலை நீடிக்கிறது.
அப்படி ஒரு சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது. பெற்ற மகளின் சடலத்தை, தந்தை கையில் சுமந்து சென்ற அவலம் நடந்துள்ளது.
தெலங்கானா மாநிலம், பொத்தப்பல்லி மாவட்டத்தில் உள்ள கூனுறு கிராமத்தை சேர்ந்தவர் சம்பத். இவரின் 7 வயது மகள் கோமளா. கடந்த 10 நாட்களாக மர்ம காய்ச்சலால் கடும் சிரமத்தை சந்தித்து வந்தார். இதனையடுத்து அவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு கரீம் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் கோமளாவிற்கு உடல் நிலை மோசமாக உள்ளது எனக் கூறியுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி கோமளா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் சிறுமியின் தந்தைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கையில் பணம் இல்லாததால் மகளின் சடலத்தை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் எனக்கேட்டுள்ளார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தரமறுத்துள்ளனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த தந்தை சுமார் 2 மணிநேரம் மருத்துவமனை முன்பு கண்ணீருடன் தவித்தார்.
பின்னர் உதவிகேட்ட இடத்தில் யாரும் எந்த உதவியும் செய்யாததால் மகளின் சடலத்தை கையில் ஏந்தியபடி மருத்துவமனைக்கு வெளியே நடந்து சென்றார். சிறிது தூரம் சென்றதும் அங்குள்ள ஆட்டோ ஓட்டுனர்களிடம் சொந்த ஊருக்குச் செல்ல உதவும்படி கேட்டார்.
ஆனால் சடலத்தை ஆட்டோவில் ஏற்ற பலரும் நிராகரித்த நிலையில் ஒரு ஆட்டோ டிரைவர் மட்டும் ஆட்டோவில் சடலத்தை ஏற்றிக்கொண்டு சம்பத்தின் சொந்த ஊருக்கு அழைத்து சென்றார்.
இந்த சம்பவம் அங்கு இருந்தவர்களை கண்கலங்க வைத்தது. மேலும் பலரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் தெலங்கானா சுகாதாரத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இத்தகைய அவலம் நடந்துள்ளது அப்பகுதி மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!
-
விழுப்புரம் ரூ.119.70 கோடி : 9,230 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!