India
ரூ.1 லட்சம் கோடி கடனில் மூழ்கிய தேசிய நெடுஞ்சாலை துறை- இதில் $5 ட்ரில்லியன் பொருளாதாரம் எப்படி சாத்தியம்?
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்பதற்காக உலக வங்கியில் ஒரு லட்சம் கோடிக்கு கடன் வாங்கியுள்ளது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.
ஆனால் இந்த கடனை திருப்பிக் கொடுக்காமல் ஆண்டுதோறும் 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வட்டி மட்டும் செலுத்துப்பட்டு வருகிறது.
சுங்கச்சாவடி கட்டணங்களாக மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால் இந்த வருவாயை விட கூடுதலாக 4 ஆயிரம் கோடி வட்டி செலுத்தவுள்ளதால் நெடுஞ்சாலைத் துறை கடனில் மூழ்கியுள்ளது.
இதனால் புதிய திட்டங்களுக்கான வகுக்க முடியாமலும், நாடு முழுவதும் புதிய சாலைகளுக்கான பணிகளை செயல்படுத்த முடியாமலும் தேசிய நெஞ்சாலை ஆணையத்துறை திணறி வருகிறது.
மக்கள் மீது சுமையை ஏற்றாமல், வருவாயை பெருக்கி கடனை அடைக்க வேண்டும் என்றும், மோசமான நிலையில் உள்ள பல தேசிய நெடுஞ்சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
நெடுஞ்சாலைத் துறையில் உள்ள கடனால் இந்தியாவின் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கு என்பது காணல் நீராக உள்ளது.
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!