India

சாதிப் பிரிவினையை ஊக்குவிக்கிறதா அரசு? - ப.சிதம்பரத்துக்கு சிபிஐ காவல் நீட்டிப்பு! : 6 மணி வரை இன்று!

தெற்கு ரயில்வேயின் டிக்கெட் பதிவு மையங்களை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு!

தமிழகத்தில் உள்ள 72 ரயில் நிலையங்களின் டிக்கெட் முன்பதிவு மையங்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.

தனியார் வசம் ஒப்படைக்கவுள்ள ரயில் டிக்கெட் பதிவு மையங்கள் மற்றும் டெண்டர் விவரங்கள் தெற்கு ரயில்வே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

“மக்கள் தலைவர்களின் சிலைகளை சிதைக்க முயல்வோரின் அற்பச் சிந்தனைகளை அகற்றிடுவோம்” : மு.க.ஸ்டாலின் அறிக்கை!

வேதாரண்யத்தில் சாதிய பிரிவினையால் அண்ணல் அம்பேத்கர் சிலை சிதைக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

சட்டம் - ஒழுங்கிற்கு சவால் விடும் இத்தகைய போக்குகளை அரசும் காவல்துறையும் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காமல் உடனடியாக அடக்கி ஒடுக்கி அப்புறப்படுத்த வேண்டும் எனத் தெரிவிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

தமிழகம் முழுவதும் இத்தகைய சக்திகளை வேரறுத்திட வேண்டிய அவசர அவசியத் தேவையை உணர்ந்து, அ.தி.மு.க. அரசு வேகமாகவும் விவேகத்துடனும் செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார் மு.க.ஸ்டாலின்.

சாதிப்பிரிவினையை ஊக்குவிக்கிறதா அரசு ? : நீதிபதிகள் கேள்வி!

வேலூர் மாவட்டத்தில் சடலத்தை பாலத்தில் இருந்து கயிறு கட்டி கீழே இறக்கிய சம்பவம் குறித்து அரசு எடுத்த நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய நீதிபதிகள், நாராயணபுரம் கிராமத்தில் ஆதிதிராவிட சமூகத்தினருக்கு மட்டும் தனி மயானம் அமைக்குவிருக்கும் நடவடிக்கைக்கு கடும் அதிருப்பதியை தெரிவித்தனர்.

மேலும், “தமிழகம் முழுவதும் ஆதிதிராவிடர்களுக்கு என தனி மருத்துவமனைகளோ, அரசு அலுவலங்களோ, காவல் நிலையங்களோ இல்லாதபோது ஏன் தனி மயானம்? ஆதிதிராவிடர்களுக்கு தனி மயானத்தை அரசு அமைத்துக் கொடுப்பது, சாதி பிரிவினையை ஊக்குவிப்பது போல் உள்ளது”. எனத் தெரிவித்தனர்.

ப.சிதம்பரத்துக்கு மேலும் 5 நாட்கள் சிபிஐ காவல் நீட்டிப்பு : சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிபிஐ-யின் கோரிக்கையை ஏற்று ப.சிதம்பரத்துக்கான சிபிஐ காவல் மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ப.சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து உச்சநீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். அதன் மீது இன்று விசாரணை நடத்தப்பட்டதில் ஏற்கெனவே சிபிஐ ப.சிதம்பரத்தை கைது செய்துவிட்டதால் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

சிக்கலில் ‘பிரிட்டானியா’ பிஸ்கெட் நிறுவனம் : பொருளாதாரச் சரிவை சரிகட்ட விலையை உயர்த்த முடிவு ?

ஜி.எஸ்.டி வரியின் காரணமாக பிரிட்டானியா நிறுவனத் தயாரிப்புகளின் விற்பனை தொய்வடைந்துள்ளது. இதனை சமாளிக்க தனது தயாரிப்புகளின் விலையை உயர்த்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சந்தையில் பெரும் சதவீதத்தை ஆக்கிரமித்துள்ள பிரிட்டானியா தனது தயாரிப்புக்களின் விலையை உயர்த்தினால், மற்ற நிறுவனங்களும் விலையை உயர்த்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.