India
துப்பாக்கி முனையில் மிரட்டி இளம்பெண் பாலியல் வன்கொடுமை: பா.ஜ.க தலைவர் மீது பாய்ந்தது போக்சோ சட்டம்!
தானேவில் உள்ள கல்யாண் பகுதி பா.ஜ.க துணைத் தலைவராக இருப்பவர் சந்தீப் கோபிநாத். 41 வயதான இவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு 17 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறியதற்கு அச்சிறுமி மறுப்புத் தெரிவித்துள்ளார்.
தன்னை நிராகரித்ததால் ஆத்திரமடைந்த சந்தீப் கோபிநாத், இளம்பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி பலமுறை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியுள்ளார்.
இதனால் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளான அந்த இளம்பெண் மான்பாடா காவல் நிலையத்தில் பா.ஜ.க நிர்வாகி சந்தீப் கோபிநாத் மீது புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து பா.ஜ.க பிரமுகர் மீது வன்கொடுமைகளுக்கு எதிரான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
ஏற்கெனவே உத்தர பிரதேசத்தின் பா.ஜ.க எம்.எல்.ஏவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான உன்னாவ் பெண் தற்போது கொலை மிரட்டலுக்கு ஆளாகியுள்ளார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பா.ஜ.கவினர் தொடர்ந்து பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வருவது மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!