India
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு... இந்திய மருத்துவ சங்கம் இன்று நாடுதழுவிய ஸ்டிரைக்!
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடுதழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.
கடந்த திங்களன்று (ஜூலை 29) தேசிய மருத்துவ ஆணைய மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் படி, 63 ஆண்டு காலமாக இருந்து வந்த இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்படும் என்றும், அதற்கு பரிந்துரைகள் மற்றும் ஆலோசைகள் வழங்குவதற்காக மருத்துவ ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஆணையத்தில் 29 பேர் உறுப்பினர்களாக இருப்பர் என்றும் அதில் 20 பேரை மத்திய அரசே நியமிக்கும், மீதமுள்ள 9 பேர் மட்டும் தேர்வு செய்யப்படுவர் என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள தேசிய மருத்துவ ஆணைய மசோதா ஏழை எளிய மக்களுக்கு ஏதுவானதாக இருக்காது. இது முற்றிலும் பணக்காரர்களை மனதில் வைத்தே நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவால் ஊழல் பெருகும் எனவும் குற்றஞ்சாட்டி எதிர்க்கட்சிகள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இதுமட்டுமல்லாமல், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராகவும், நவீன அறிவியல் மருத்துவத்திற்கு எதிராகவும் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!