India

தமிழகத்திற்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்குவதாக அறிவித்த கேரளா : மறுத்ததா தமிழக அரசு?

தமிழகத்தில் பல மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். தண்ணீருக்காக பல மைல் தூரம் நடந்து சென்று காத்திருந்து குடங்களில் கொண்டுவரவேண்டிய சூழல் நிலவுகிறது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மக்கள் எந்நேரமும் தண்ணீர் லாரியை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நிலை இருந்து வருகிறது. கடுமையான தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத அரசைக் கண்டித்து மக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

பல உணவகங்களும், மேன்ஷன்களும் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளன. தண்ணீர் தட்டுப்பாட்டால் சென்னையில் அமைந்திருக்கும் பல ஐ.இ நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்துக்கு உதவ கேரள அரசு முடிவு செய்துள்ளது. தமிழக முதல்வர் அலுவலகத்தின் வேண்டுகோளை ஏற்று கேரள அதிகாரிகளுக்கு முதல்வர் பினராயி விஜயன் தண்ணீர் உத்தவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை கருத்தில்கொண்டு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் திருவனந்தபுரத்தில் இருந்து ரயில் மூலம் கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு அனுப்பப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.