India
பீகாரில் அடுத்தடுத்து 41 குழந்தைகள் உயிரிழப்பு : காரணம் என்ன?
பீகாரில் என்செபாலிடிஸ் என்ற ஒருவித மூளைக்காய்ச்சலால் இதுவரை 41 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும், இந்தக் காய்ச்சல் வடக்கு பீகாரின் முசாஃபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளை அதிகம் பாதித்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
கடந்த இரண்டு நாட்களில் அங்கு 36 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
என்செபாலிடிஸ் நோயானது மூளையின் செயல்பாட்டைத் தாக்கி குழப்பம், கோமா, வலிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தி உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடும் ஒருவித காய்ச்சல். குழந்தைகளின் தொடர் உயிரிழப்பால் பீகார் மாநில மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்நிலையில், குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணம் என்செபாலிடிஸ் அல்ல, ஹைப்போக்ளைசீமியா என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் வெறும் வயிற்றோடு தூங்குவதால் உடலின் வெப்பநிலை அதிகரித்து, நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்பட்டு இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு வெகுவாகக் குறைவதே உயிரிழப்புக்குக் காரணம் என மருத்துவக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதைத் தவிர்க்க குறைந்த ரத்த சர்க்கரை நிலையான ஹைட்ரோகிளைசீமியாவை தூண்டும் வகையில் குழந்தைகளை வெறும் வயிற்றோடு இரவில் தூங்க அனுமதிக்க வேண்டாம் என்றும், ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுகளை விநியோகம் செய்யவும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் வலியுறுத்தி உள்ளார்.
பீகார் மாநில அரசுக்கு மருத்துவ ரீதியான ஆலோசனைகள் வழங்க உயர்மட்ட மருத்துவக் குழு பாட்னாவுக்கு விரைந்துள்ளது. மருத்துவ சிகிச்சைகளைத் தீவிரப்படுத்தவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது பீகார் அரசு.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!