India
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் : மூன்று சி.ஆர்.பி.எப் வீரர்கள் மரணம் !
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பகுதியில் உள்ள கே.பி சோக் பேருந்து நிலையம் உள்ள பகுதியில் பாதுகாப்பு அணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அப்பொழுது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு மற்றும் கையெறி குண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 5 சிஆர்பிஎப் வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
காயம் அடைந்த வீரர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் மூன்று சி.ஆர்.பி.எப் வீரர்கள் மரணமடைந்து உள்ளனர். இருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளனர். தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்று வருகிறது. அதில், ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொள்ளப்பட்டார் எனவும் கூறப்படுகிறது. மேலும், பொது மக்களைச் சேர்ந்த ஒருவரும் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!