India
மாயமான விமானத்தின் பாகங்கள் 8 நாட்களுக்குப் பின்னர் கண்டுபிடிப்பு!
கடந்த ஜூன் 3-ம் தேதி 13 பேருடன் மாயமான ஏ.என்-32 ரக விமானத்தின் உடைந்த பாகங்கள் அருணாசல பிரதேச மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஏ.என் - 32 ரக விமானப் படை விமானம், கடந்த ஜூன் 3-ம் தேதி அசாம் மாநிலத்தின் ஜோர்கத் என்ற இடத்திலிருந்து, அருணாசல பிரதேசத்தின் மெச்சுகா என்ற இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது ரேடாரின் கண்காணிப்பில் இருந்து மாயமானது. அந்த விமானத்தில் 13 பேர் இருந்தனர்.
மாயமான விமானத்தை தேடும் பணியில் இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் ஈடுபட்டிருந்தன. இந்நிலையில், 8 நாட்களுக்குப் பின்னர் அருணாச்சல பிரதேச மாநிலம் லிபோ என்ற பகுதியில் இருந்து 16 கி.மீ தொலைவில் ஏ.என்-32 ரக விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விமானத்தில் இருந்தவர்களில் யாரேனும் உயிருடன் இருக்கலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் விமானப்படை தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து வருகிறது. தேடுதல் வேட்டையில் இந்திய விமானப்படையின் சி -130 ஜே, சுகோய் சு - 30 பேர் விமானங்கள், ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை ஈடுபட்டு வருகின்றன.
Also Read
-
திருவள்ளுவர் சொல்லாத குறளை சொன்ன விவகாரம்... ஆளுநர் ரவி செய்தது திட்டமிடப்பட்ட சதி : செல்வப்பெருந்தகை !
-
1 மணி நேரம் வராத புறநகர் மின்சார ரயில்... ரயிலை மறித்து பயணிகள் போராட்டம் : சென்னையில் நடந்தது என்ன ?
-
மயிலாடுதுறை மக்களே.. உங்களுக்காக 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“பத்து தோல்வி பழனிசாமிக்கு வரும் தேர்தல் நிறைவான Goodbye!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
கச்சத்தீவை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!