India
இன்று மாலை வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள்!
2019-2020ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு கடந்த மாதம் மே 5-ம் தேதி நடைபெற்றது.
தமிழகத்தில் இருந்து 1.40 லட்சம் பேரும், நாடுமுழுவதிலும் இருந்து 15 லட்சத்துக்கு மேலான மாணவர்களும் நீட் தேர்வை எழுதினர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 11 மொழிகளில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் 147 நகரங்களில் உள்ள 2,500 மையங்களில் நீட் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த நிலையில், இன்று (ஜூன் 5) மாலை 4 மணிக்கு நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளது தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ). இதனையடுத்து, நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு மூலம் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!