India
லோக்சபா தேர்தல் தோல்வி எதிரொலி: உ.பி.,யில் உடைகிறதா அகிலேஷ் - மாயாவதி கூட்டணி ?
நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாததால் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதியுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடந்து முடிந்த தேர்தலில் சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜும் 37 மற்றும் 38 தொகுதிகள் என்ற வரிசையில் போட்டியிட்டனர். இதில் பகுஜன் சமாஜ் 38க்கு 10 தொகுதிகளிலும், சமாஜ்வாதி 37க்கு 5 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.
இதனால் அதிருப்தி அடைந்த மாயாவதி தனது கட்சி நிர்வாகிகளுடன் மேற்கொண்ட ஆலோசனையில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி உடனான கூட்டணியை முறித்துக்கொள்ள முடிவெடுத்திருப்பதாகவும், உத்தர பிரதேசத்தில் 11 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட முடிவெடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உத்தரகாண்ட், பிகார், ஜார்கண்ட், ராஜஸ்தான், குஜராத், ஒடிசா ஆகிய 6 மாநிலங்களுக்கான பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்பாளர்களை நீக்கி உத்தரவிட்டுள்ளார் மாயாவதி.
உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் - மாயாவதி, காங்கிரஸ், பா.ஜ.க என மும்முனைப் போட்டி நிலவியது. இதனால் வாக்குகள் அதிக அளவில் பிரிந்ததால், பல இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றது. மேலும், பல இடங்களில் அகிலேஷ் கட்சியினர் பல இடங்களில் தனது கட்சிக்கு சரியாகத் தேர்தல் வேலை செய்யவில்லை என்பதால் மாயாவதி கடுமையான கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!