India
டெல்லியில் பெண்களுக்கு இலவச போக்குவரத்து சேவை : கெஜ்ரிவால் அறிவிப்பு!
நாட்டின் தலைநகரான டெல்லியில் பெண்களுக்கான பாதுகாப்பில் குறைபாடு இருப்பது அனைவரும் அறிந்ததே. அதற்கு இளம்பெண் நிர்பயா பாலியல் வன்கொடுமையால் தாக்கப்பட்டு பலியானதே உதாரணம்.
ஆகையால், பெண்களின் பாதுகாப்பு நலனுக்காக டெல்லியில் உள்ள அனைத்து அரசுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார் அம்மாநில முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால்.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், டெல்லியில் தினசரி பயணிக்கும் 40 லட்சத்துக்கும் மேலான பயணிகளில் பெண்கள் 30% பேர் உள்ளனர். எனவே போக்குவரத்து சேவையில் அதிகமான கட்டணம் காரணமாக பெண்களால் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, பெண்கள் பாதுகாப்பாக, இலவசமாக டெல்லியில் அரசு போக்குவரத்து பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிக்கலாம். காசு கொடுத்து டிக்கெட் வாங்கி பயணிக்க விரும்பும் பெண்கள் இந்தச் சலுகையை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இத்திட்டம் இரண்டு முதல் 3 மாதங்களில் அமல்படுத்தப்படும் எனவும், இத்திட்டத்துக்கு சுமார் 700 கோடி ரூபாய் செலவிடப்படும் எனவும் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல், பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதே அரசின் தலையாய கடமை என துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
Also Read
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!