India
மோடியின் 2.0 அமைச்சரவை : பழையவர்கள் யார் ? புதியவர்கள் யார் ? தமிழகத்தில் இருந்து யார் ?
நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தலில் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 350 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இதில் பா.ஜ.க மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இதைத் தொடர்ந்து, குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று மாலை 7 மணிக்கு மோடி மற்றும் புதிய அமைச்சரைவையும் பதவியேற்கும் விழா நடைபெற இருக்கிறது.
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மோடிக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.புதிய அமைச்சரவையில் இடம்பெறப்போகும் அமைச்சர்களை தேர்வு செய்ய மோடி 3 முறை கூட்டம் நடத்தியிருக்கிறார்.
மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெறப்போகும் அமைச்சர்கள் யார்? ஏற்கனவே பணியில் இருந்த அமைச்சர்களில் மீண்டும் அமைச்சர் பதவி பெறுபவர்கள் யார் என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
முன்பு பதவி வகித்த அமைச்சர்களில் மீண்டும் அமைச்சரவையில் இடம்பெற உள்ள அமைச்சர்கள் :
நிதின் கட்காரி
ராஜ்நாத் சிங்
நிர்மலா சீதாராமன்
பியுஷ் கோயல்
ரவி ஷங்கர் பிரசாத்
பிரகாஷ் ஜவடேக்கர்
முக்தார் அப்பாஸ் நக்வி
கிரென் ரிஜிஜு
ஆகியோர் உறுதியாக மீண்டும் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அவர்களின் முந்தைய அமைச்சரவைத் துறையில் இருந்து தற்போது வேறு துறைக்கு மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தவிர அமைச்சரவையில் இடம்பெறுபவர்கள் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது:
சாத்வி நிரஞ்சன் ஜோதி
ஜிதேந்திர சிங்
பிரஹலால் ஜோஷி
சந்தோஷ் கங்கர்
ராவ் இட்ராஜித் சிங்
அர்ஜுன் மெக்வால், ராஜ்ய சபா எம்.பி.
பர்ஷோத்தம் ரூபலா
ரமேஷ் போக்ரியால் நிஷாங்க்
பாபுல் சப்ரியோ
சதானந்த கௌடா
நித்யானந்த் ராய்
தெலுங்கானாவின் செகந்தராபாத்தில் இருந்து பா.ஜ.க எம்.பி., கிஷன் பால் குஜார்
கர்நாடகாவின் பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் அங்கடி
ஓ.பி ரவீந்திரநாத் குமார், தமிழக அ.தி.மு.க எம்.பி
இவர்கள் அனைவரும் பா.ஜ.க அமைக்கும் புதிய அமைச்சரவையில் இடம்பெறவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
Also Read
-
“அமலாக்கத்துறை நடத்தும் அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!