India

மோடியின் புதிய அமைச்சரவையின் முழு பட்டியல்!

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார் நரேந்திர மோடி. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதன் பின் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது.

புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்களின் முழு பட்டியல்:

மத்திய அமைச்சரவை (கேபினட்) :

  • நரேந்திர மோடி - அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதியத் அமைச்சர்.

  • ராஜ்நாத் சிங் - பாதுகாப்பு துறை

  • அமித் ஷா - உள்துறை அமைச்சர்

  • நிதின் கட்காரி - சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்; மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சர்

  • சதானந்த கவுடா - இராசயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர்

  • நிர்மலா சீதாராமன் - நிதி அமைச்சர் மற்றும் கார்ப்பொரேட் விவகாரங்கள் அமைச்சர்

  • ராம்விலாஸ் பாஸ்வான் - நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர்

  • நரேந்திர சிங் தோமர் - விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர்

  • ரவி ஷங்கர் பிரசாத் - சட்டம் மற்றும் நீதி அமைச்சர்

  • ஹர்சிம்ரத் கவுர் பாதல் (சிரோன்மணி அகாளி தளம்) - உணவு பதப்படுத்துதல் நிறுவனங்கள் அமைச்சர்

  • தவார் சந்த் கெலாட் - சமூக நீதி அமைச்சர்

  • சுப்பிரமணியம் ஜெய்சங்கர் - வெளியவுறவுத் துறை அமைச்சர்

  • ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் - மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்

  • அர்ஜுன் முண்டா - பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்

  • ஸ்மிருதி இரானி - ஜவுளித் துறை அமைச்சர்

  • டாக்டர் ஹர்ஷ்வர்தன் - சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சர்

  • பிரகாஷ் ஜவடேகர் - தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர்

  • பியுஷ் கோயல் - ரயில்வே துறை அமைச்சர்

  • தர்மேந்திர பிரதான் - பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர்

  • முக்தார் அப்பாஸ் நக்வி - சிறுபான்மையினர் நலத்துறை துறை அமைச்சர்

  • பிரஹ்லாத் ஜோஷி - நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர்

  • மகேந்திர நாத் பாண்டே - திறன் வளர்ப்பு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர்

  • அரவிந்த் சாவந்த் (சிவசேனா) - பொது நிறுவனங்கள் துறை அமைச்சர்

  • கிரிராஜ் சிங் - கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளர்ப்புத் துறை அமைச்சர்

  • கஜேந்திர சிங் ஷெகாவத் - நீர்வளத் துறை அமைச்சர்

தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் :

  • சந்தோஷ் குமார் கங்கர்

  • ராவ் இந்திரஜித் சிங்

  • ஸ்ரீபத் நாயக்

  • ஜிதேந்திர சிங்

  • கிரெண் ரிஜிஜு

  • பிரஹ்லாத் சிங் படேல்

  • ராஜ்குமார் சிங்

  • ஹர்தீப் சிங் புரி

  • மன்சுக் எல். மாண்டவியா

இணை அமைச்சர்கள்:

  • ஃபாக்கன் சிங் குலஸ்டே

  • அஷ்வினி குமார் சௌபே

  • அர்ஜுன் ராம் மேக்வால்

  • ஜெனரல் (ஓய்வு) வி.கே. சிங்

  • கிரிஷன் பால் குஜார்

  • தன்வே ரோசஹிப் தாதராவ்

  • கிஷன் ரெட்டி

  • புருஷோத்தம் ரூபலா

  • ராம்தாஸ் அத்வாலே

  • சாத்வி நிரஞ்சன் ஜோதி

  • பாபுல் சுப்ரியோ

  • சஞ்சீவ் குமார் பால்யன்

  • தூதரே சஞ்சய் சம்ரோவ்

  • அனுராஜ் சிங் தாக்குர்

  • அங்காடி சுரேஷ் சன்னபசப்பா

  • நித்தியானந்த் ராய்

  • ரத்தன்லால் கட்டாரியா

  • வி. முரளிதரன்

  • ரேணுகா சிங் சாருதா

  • சோம் பர்காஷ்

  • ராமேஷ்வர் தெளி

  • பிரதாப் சந்திரா சாரங்கி

  • கைலாஷ் சவுத்ரி

  • தேபாஸ்ரீ சவுதுரி

இந்த புதிய அமைச்சரவையில் அ.தி.மு.கவுக்கு இடம் கிடைக்கவில்லை.