India
ஜூன் 6ம் தேதி 17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர்?
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து மோடியின் பாஜக கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. வருகிற 30ம் தேதி நரேந்திர மோடி மீண்டும் பிரதமாராக பதவியேற்க இருப்பதாக குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்திருக்கிறது.
இதனையடுத்து மறுநாளான மே 31ல், மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் 17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரை எப்போது நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஜூன் 6ம் தேதி முதல் 15ம் தேதி வரை 6 நாட்கள் மக்களவைக் கூட்டத்தொடர் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், கூட்டத்தொடரின் போது, புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற எம்.பிக்கள் பதவியேற்க உள்ளனர்.
Also Read
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
தீபாவளி பண்டிகை : சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் - கிளாம்பாக்கத்தில் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர்!