India
குஜராத் தீவிபத்து : உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு !
குஜராத் மாநிலம் சூரத் நகரில் சர்த்தானா என்ற இடத்தில் டியூசன் செண்டர் இயங்கி வந்துள்ளது. இந்த டியூசன் செண்டரில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தினம் வந்து படித்து வந்தனர். இந்த டியூசன் செண்டரில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.
19 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரார்கள் தீயினை அணைக்க போராடினர்கள், ஆனால் தீ கட்டுக்குள் கொண்டுவருவதற்குள் 20 மாணவ, மாணவிகள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 16 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை முதலமைச்சர் விஜய் ரூபானி மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். இதனிடையே சூரத் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், கட்டிடத்தில் பயிற்சி வகுப்பு நடத்திய பார்காவ் புதானி என்பவரை கைது செய்துள்ளனர்.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!