India
இதுவரை இல்லாத அளவில் அதிக பெண் எம்.பி-களை காணப்போகும் மக்களவை!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 724 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 78 பெண்கள் வெற்றி பெற்று எம்.பி-களாக பதவியேற்க உள்ளனர்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகளின்படி, இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் 78 பெண் எம்.பி-கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த தேர்தலில் 64 பெண் எம்.பி-கள் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில் அதிகபட்சமாக 54 பெண் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த 78 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்.பி-களாக பதவியேற்க இருக்கின்றனர்.
தமிழகத்திலிருந்து 3 பெண் எம்.பி-கள் மக்களவைக்குச் செல்லவிருக்கிறார்கள். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி கருணாநிதி, தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன், கரூர் தொகுதியில் போட்டியிட்ட ஜோதிமணி ஆகிய மூவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
Also Read
-
“இருளகற்றும் ஒளி சூரியனிடம்தான் உண்டு!” : திராவிட முன்னேற்றக் கழகம் சூளுரை!
-
“மின்வெட்டு.. ரீல்ஸ் போடாமல்.. போர்க்கால நடவடிக்கை எடுங்கள்” : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளாசல்!
-
“தமிழ்நாட்டை உலுக்கிய சேலம் பாலியல் வன்கொடுமை சம்பவம்” - சிபிசிஐடி விசாரிக்க இடதுசாரிகள் வலியுறுத்தல்!
-
“கழகத் தலைவரின் அன்பில்.. தாயின் பரிவையும், தலைவனின் தன்னம்பிக்கையும் பார்க்கிறோம்” : தங்கம் தென்னரசு!
-
“அதிமுக. MLAக்களை ஷாப்பிங் செய்து கொண்டிருக்கும் விஜய்; பாஜகவின் ஜெராக்ஸ்” : தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கு!