India
“5 ஆண்டுகளாக பத்திரிகையாளர்களை சந்திக்காத மோடி கடைசி நேரத்தில் சந்தித்தது ஏன்?” : ராகுல்
பிரதமர் பதவியில் இருந்த ஐந்தாண்டு காலமும் பத்திரிகையாளர்கள் சந்திப்பைத் தவிர்த்து வந்த மோடி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பத்திரிகையாளர்களை அமித்ஷாவுடன் இணைந்து இன்று சந்தித்தார்.
அதே நேரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துப் பேசினார் ராகுல்.
5 ஆண்டுகளாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தாமல் கடைசி நேரத்தில் சந்திக்கிறார் மோடி. ஆனால், ரஃபேல் போர் விமான பேரம் பற்றி மோடி என்னுடன் விவாதிக்க மறுப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார் ராகுல் காந்தி.
மேலும் பேசிய ராகுல், “மோடி போல நான் அனுபவசாலிகளை மதிக்காத ஆள் கிடையாது. எனக்கு சோனியா காந்தி, மன்மோகன் சிங் போன்ற மூத்த தலைவர்களின் ஆலோசனை இருக்கும்.
இந்தத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மிகவும் பாரபட்சமானது. தேர்தல் கால அட்டவணை கூட பிரதமர் மோடிக்கு சார்பான வகையில்தான் அமைக்கப்பட்டது. பா.ஜ.க-விடமும், மோடியிடமும் நிறைய பணம் உள்ளது. ஆனால், எங்களிடம் உண்மையும் நேர்மையும் உள்ளது. தேர்தலில் மோடியும், அமித்ஷாவும் மிகப்பெரிய அளவில் பண பலத்தைப் பயன்படுத்தியுள்ளனர். மக்களின் முடிவே எங்களின் முடிவாக இருக்கும்.
பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ்ஸும் கடவுளை விரும்பவில்லை. கோட்சேவை தான் விரும்புகிறார்கள். பாஜக ஆட்சி அமைப்பதற்கான எல்லா கதவுகளையும் 90 சதவிகிதம் நாங்கள் மூடிவிட்டோம். மீதமிருந்த 10 சதவிகித வாய்ப்பை மோடியே கெடுத்துக் கொண்டார்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“இந்த வெற்றிக்கு காரணமான முதலமைச்சருக்கு நன்றி” - தங்கம் வென்ற கபடி வீரர்கள் நெகிழ்ச்சி!
-
தென்காசி பகுதியில் வெட்டப்பட்ட பனை மரங்கள்.. பரப்பப்படும் வதந்தி... உண்மை என்ன? - TN Fact Check விளக்கம்!
-
"என்னய வச்சி Famous-ஆக நினைக்குறாரு வினோத்" : விஜய் சேதுபதியிடம் குற்றச்சாட்டை அடுக்கிய திவாகர்!
-
“மணத்தி கணேசன் தொடங்கி கார்த்திகா வரை...” பெருமை கொள்ளும் தமிழ்நாடு - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!