India
நாடு முழுவதும் ஓய்ந்தது தேர்தல் பிரசாரம்!
நாடு முழுவதும் ஏழாவது கட்ட மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஒய்ந்தது.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி 6 கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில் மீதமுள்ள 59 தொகுதிகளுக்கான 7-ம் கட்டத் தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது.
கடைசி கட்ட தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. தமிழகத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் மே 19-ம் தேதி நடக்கிறது. இதற்கான பிரசாரமும் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
நான்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
Also Read
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !
-
“இது ஆன்மிகம் அல்ல; கேடுகெட்ட அரசியல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
-
“மதுரை தொழில் நகரமாகவும் புகழ் பெறவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை இலட்சியம்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“தமிழ்நாட்டின் சாபக்கேடு எச்.ராஜா” : அமைச்சர் சேகர்பாபு கடும் தாக்கு!
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!