India

ஏப்ரல் மாதத்தில் மோடியின் முகத்தை மட்டும் 722 மணி நேரம் காட்டிய வட இந்திய ஊடகங்கள் 

தொலைக்காட்சி நிறுவனங்கள் தொடர்பான ஆய்வுகளுக்கு பெயர் போன BARC நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வு முடிவில், கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் 28ம் தேதி வரையிலான 28 நாட்களில் பிரதமர் மோடியை மொத்தம் 722 மணி நேரம் வட இந்திய ஊடகங்கள் காட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால், அதே நேரத்தில் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி 252 மணிநேரத்திற்கும் குறைவாகவே காட்டியுள்ளன. இது மோடியுடன் ஒப்பிடுகையில் சுமார் 3 மடங்கு அதிகம். இந்த 28 நாட்களில் ராகுல் காந்தி 65 பேரணிகளிலும், மோடி 64 பேரணிகளிலும் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷாவை 124 மணி நேரமும், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தியை 84 மணி நேரமும் ஊடகங்கள் காட்டியுள்ளன.

புதிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதில் இருந்து, சுவரெழுத்து, நோட்டீஸ்கள் தடை செய்யப்பட்ட நிலையில், டிஜிட்டல் விளம்பரங்கள் மட்டுமே மக்களை சென்றடையும் வழியாக இருந்து வருகிறது.

வட இந்தியாவில் ஊடகங்கள் பெரும்பலௌம் கார்ப்பரேட் நிறுவனங்களின் கையில் உள்ள நிலையில், பொய்பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ள பா.ஜ.க அந்த நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

இதுபோன்ற பொய் பிரச்சார யுக்திகள், போலி விளம்பரங்கள், மோடியின் முகத்தை அதிக நேரம் ஒளிப்பரப்புவது போன்ற தவறான வழிமுறைகளின் மூலம் எப்படியாவது மோடியை மக்கள் மனதில் நிறுத்தி வைக்க பா.ஜ.க முயல்கிறது என்பதற்கு இந்த புள்ளிவிபரங்களே உண்மை.