India
காஷ்மீரில் சிறுமிக்கு பாலியல் கொடுமை : போராட்டத்தில் இராணுவத்தினர் மீது கல்வீச்சு!
காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள சம்பல் எனும் கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமியை 20 வயது இளைஞன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது காவல்துறை. பாலியல் கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞனை தூக்கில் ஏற்ற வேண்டும் என முழக்கமிட்டபடி காஷ்மிர் மாநிலம் முழுவதும் போராட்டக்களமாக மாறியுள்ளது. குறிப்பாக ஸ்ரீநகரில் உள்ள அமர்சிங் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது வன்முறை உருவானதால் பாதுகாப்புக்காக அங்கு இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.
அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி மாணவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
இதற்கிடையில், சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து அரசியல் தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். காஷ்மிரின் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி ஆகியோரும் இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!