Jet Airways
India

ஜெட் ஏர்வேஸ் துணை சிஇஓ அமித் அகர்வால் திடீர் ராஜினாமா!

விமான நிறுவனங்களிடையேயான வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கான தொழில் போட்டியால் கிங் ஃபிஷர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் கடுமையான சரிவைச் சந்தித்தன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியது.

போதிய பணப்புழக்கம் இல்லாததால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானிகள், ஊழியர்கள், பணிப்பெண்கள் ஆகியோருக்கான ஊதியத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது ஜெட் ஏர்வேஸ்.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம், வேறு வழியின்றி அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளது. சரிவடைந்துள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு கடன் அளிப்பவர்கள் அந்நிறுவனத்தின் பங்குகளை கைப்பற்றி வருகின்றனர். வழங்கிய கடன்களை மீட்க அந்நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.

Amit Agarwal

இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரியும், தலைமை நிதி அதிகாரியாகவும் இருந்து வந்த அமித் அகர்வால் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.