India
மக்களவை தேர்தல் : தொடங்கியது 6-வது கட்ட வாக்குப்பதிவு !
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 425 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், மீதுள்ள 118 தொகுதிகளுக்கு மேலும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.
அதன்படி, இன்று பீகாரில் 8, அரியானா 10, ஜார்கண்ட் 4, மத்திய பிரேதசம் 8, உத்திரபிரதேசம் 14, மேற்கு வங்கம் 8, டெல்லியில் 7 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் போலீசாரும், மத்தியப் படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல், கடந்த ஏப்ரல் 11-ம் தேதி நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவின்போது, திரிபுராவில் ஒரு தொகுதியில் முறைகேடு நடைபெற்றதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால், அங்குள்ள 168 வாக்குச் சாவடிகளிலும் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
Also Read
-
“த.வெ.க பொறுக்கிகளால் பெண் போலீசாருக்கே பாதுகாப்பில்லை” : தி.மு.க IT Wing கண்டனம்!
-
அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகரிடம் தி.மு.க கடிதம்!
-
“தி.மு.க முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது!” : கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!
-
“பேரறிஞர் அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார்! வாழ்க அண்ணாவின் புகழ்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுங்கள்! - முரசொலி தலையங்கம்!