India
தொடங்குவதற்கு முன்பே 50 வாக்குகள் பதிவு : வாக்குப்பதிவில் முறைகேடா?
மக்களவைத் தேர்தல் இதுவரை 5 கட்டங்களாக 424 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. ஆறாவது கட்டமாக 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.
டெல்லியின் 7 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், டெல்லியின் பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு சர்ச்சையாகியுள்ளது. டெல்லியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி ஒன்றில் வாக்குப்பதிவு தொடங்கும்போதே 50 வாக்குகள் பதிவாகியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மாலவியா நகரில் உள்ள 132-ஆம் எண் வாக்குச்சாவடியில் ஹஸ்ரானி என்பவர் முதல் நபராக வாக்களிக்கச் சென்றுள்ளார். ஆனால், அவர் வாக்கைச் செலுத்தச் சென்றபோதே வாக்கு எந்திரத்தில் ஏற்கனவே 50 வாக்குகள் பதிவாகியிருந்துள்ளன. இதனால் அதிர்ந்த அவர் இது எப்படி நடந்தது என அங்கிருந்த அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து டெல்லி தலைமைத் தேர்தல் அதிகாரி எந்தக் கருத்தையும் கூற மறுத்துள்ளார். டெல்லியில் பல்வேறு பகுதிகளிலும் வாக்கு இயந்திரங்களில் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
🔴#LIVE : சட்டப்பேரவை கூட்டத்தொடர் : “இனி ஆளுநர் உரை இருக்காது” - முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம்!
-
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் : இனி ஆளுநர் உரைக்கு ஆப்பு.. முதலமைச்சர் கொண்டு வந்த அதிரடி தீர்மானம் என்ன?
-
சாகித்ய அகாடமி விருது நிறுத்தத்தின் எதிரொலி.. “பா.ஜ.க. அரசின் தலையில் விழுந்த இரட்டை அடி!” - முரசொலி!
-
“திராவிட இயக்கம் எப்போதும் எழுத்தாளர்களை கொண்டாடும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
தமிழினப் பெருமைகளை உலகெங்கும் பறைசாற்றும் வகையில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா!